வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 20 ஜனவரி, 2011

கஞ்சா கடத்தும் புறா கொலம்பியாவில் சிக்கியது (காணொளி இணைப்பு) _

சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு புறாவின் மூலம் கஞ்சா போதைப் பொருளினை அனுப்பும் நடவடிக்கையினை கொலம்பிய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது பிடிபட்ட புறாவின் உடலில் சுமார் 1.5 அவுன்ஸ் அளவிலான கஞ்சா பொதியொன்று கட்டப்பட்டிருந்துள்ளது.
இப்பொதியின் நிறையை தாங்க முடியாத புறா இடை நடுவே நின்றுள்ளது.
சிறைச்சாலைக்கு அருகில் புறா பறக்க முடியாமல் திணறிக் கொண்டு இருப்பதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதனை பரிசோதித்த போதே இவ்விடயம் அம்பலமாகியுள்ளது.
கொலம்பிய போதைப் பொருள் கும்பல்கள் கடத்தல்களுக்கு பல புதிய உத்திகளை கையாளுவதாக அந் நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’