கனடாவில் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க அதன் புலம்பெயர் பொறுப்பாளர்கள் முயற்சிப்பதாக அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமது தலைமைத்துவத்திற்கான அடித்தளத்தை கனடாவில் உருவாக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.Read: In English
தென்கிழக்காசியாவில் இருந்து சட்டவிரோத இலங்கைக் குடியேற்றவாசிகளை ஏற்றிய இரண்டு கப்பல்கள் கனடா நோக்கி பயணிக்கவுள்ளதாக தகவல் வெளியானதையடுத்தே கனேடிய அதிகாரிகள் இக்கருத்தினை வெளியிட்டுள்ளனர். குறித்த கப்பலில் சுமார் 50 முன்னாள் புலி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இருக்கலாமென கனேடிய புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன. கனடாவில் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கவே குறித்த கப்பல்கள் தமது நாட்டுக்கு வருவதாக கனேடிய அதிகாரிகள் கூறியுள்ளனர். தெற்காசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு இலகுவதாக செல்ல முடிகின்ற போதிலும் அவர்கள் அங்கு செல்லாமைக்கு இதுவே காரணமென்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’