வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 3 ஜனவரி, 2011

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு விசா வழங்கினால் அரசாங்கம் வீடு செல்லவேண்டி வரும் : தே.தே.இ

க்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவிற்கு இலங்கை வருவதற்கு விசா வழங்கினால் அரசாங்கம் வீடு செல்லநேரிடும். இலங்கைக்கு எதிரான சர்வதேச நாடுகளின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் சாதகமாக செயற்பட முயற்சிக்க கூடாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

புலிகளின் சிரேஷ்ட ஆதரவாளர்கள் மூவருள்ள ஐ.நா. நிபுணர் குழுவினை நாட்டிற்குள் வர அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கையில் ஜனாதிபதி தொடர்ந்தும் இருக்க வேண்டும். இல்லையென்றால் வேலியில் ஓடிய ஓணானை மடிக்குள் விட்ட கதையாக அவஸ்தைப்பட வேண்டி வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில்,
மேற்குலக நாடுகளின் தேவைகளுக்காக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய நிபுணர் குழுவிற்கு இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்க தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஒருபோதும் இடமளிக்காது. இந்த நாட்டு மக்களும் அந்த நிபுணர் குழுவின் வருகையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஏனென்றால் அவர்கள் இலங்கைக்கு வருவது எமக்கு உதவி, ஒத்தாசைகள் வழங்குவதற்கல்ல. புலிகளுக்கு எதிரான போரில் எமது இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது என குற்றம் சுமத்தி அதனை விசாரணை செய்யவே நிபுணர் குழு இலங்கை வருகின்றது. எமது இராணுவ வீரர்களை தூக்கிலிட வரும் ஐ.நா. நிபுணர் குழுவை நாம் நாட்டிற்குள் வர எவ்வாறு அனுமதிப்பது?
அரசாங்கம் ஐ.நா. நிபுணர் குழுவினருக்கு இலங்கை வர விசா வழங்க சம்மதித்துள்ளமை நாட்டிற்கும் இராணுவத்திற்கும் செய்த பாரிய துரோகமாகும். இந்த நாட்டு மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியது நாட்டை பிரிவினைவாத சக்திகளுக்கு காட்டிக் கொடுப்பதற்காக அல்ல. எனவே ஐ.நா. நிபுணர் குழு விடயத்தில் எவ்வாறு செயற்படுகின்றது என்பதிலேயே அரசாங்கத்தின் எதிர்காலம் உள்ளது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’