பளை பிரதேச செயலக பிரிவில் நேற்றைய தினம் (1) தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் சுகாதாரத் தொண்டர்கள் கூட்டுறவுச் சங்கத்தினர் மற்றும் பொது மக்களுக்கு ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் கிடைக்கின்ற உதவிகளை மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் துவிச்சக்கர வண்டிகள் உங்களின் அன்றாட வாழ்வின் ஒரு முக்கிய தேவையாக உள்ளது என்றும் உதவிகள் கிடைக்கப்பெறாதவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் அவர்களுக்கு வேறொரு திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தாமதமாக மீள் குடியேற்றப்பட்ட இப்பிரதேச மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆளுநர் அவர்களால் இத் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று 132 துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பளைப் பிரதேச செயலாளர் திரு முகுந்தன் பளை பிரதேச வைத்திய அதிகாரி சி.மைதிலி பளைப் பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் திரு ஜெயக்குமார் பிரதேச சபைச் செயலாளர் சிவபிரகாசம் மற்றும் கிராம அலுவலர்கள் மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’