வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 3 ஜனவரி, 2011

பெண்ணின் கழுத்தில் குத்திவிட்டு பெருமளவு தங்க நகைகள் கொள்ளை: மானிப்பாய் பகுதியில் சம்பவம்

னிமையில் வாழ்ந்து வந்த குடும்பப் பெண்ணின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற கொள்ளையர்கள் அப்பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உட்பட பல ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இத் துணிகர சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிலுள்ள சங்குவேலி தெற்கில் இடம்பெற்றுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது பிரஸ்தாப பெண்ணின் கணவர் பல வருடங்களுக்கு முன் காணாமற் போனதைத் தொடர்ந்து இவர் தனது வீட்டில் தனிமையாக வாழ்ந்து வந்தார்.
புது வருட தினமான சனிக்கிழமை நள்ளிரவு இப்பெண்ணின் வீட்டிற்குச் சென்ற கொள்ளையர்கள் தனிமையில் உறக்கத்திலிருந்த பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தி விட்டு அவர் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உட்பட பல ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அயலவர்கள் இச் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் இரத்த வெள்ளத்தில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த பெண்ணை உடனடியாக யாழ். வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொள்ளை பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து பெண்ணைக் குத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியையும் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் நள்ளிரவு நேரம் இப் பிரதேசத்திலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற கொள்ளையர்கள் ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்தி 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’