வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 3 ஜனவரி, 2011

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தமது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்: இமெல்டா

குடாநாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் தமது அதிகாரங்களை முழு அளவில் பயன்படுத்த வேண்டும். முடியாவிட்டால் இராணுவத்தினரின் உதவியை நாட வேண்டும் என்று யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.


அதிகரித்துள்ள குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுடனும் பிரதேச செயலர்களிடமும் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை இவ்வாரம் முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தொடர்ந்தும் கூறுகையில்,
யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனும் அசௌகரியங்களுடனேயே வாழ்கின்றனர். இவ்வாறு அதிகரித்துள்ள குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது பொலிஸாரின் கடமையாகும்.
இது தொடர்பாக பல முறை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். எவ்வாறாயினும் இவ்வாரத்தில் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகளுடன் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளேன். இச்சந்திப்பில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளது.
பொலிஸாரினால் வடக்கில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் இராணுவத்தை களத்தில் இறக்குவது குறித்து தீர்மானிக்கப்படும் எனக் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’