வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 27 ஜனவரி, 2011

காலி இலக்கிய விழா

லங்கையின் காலி நகரில் நடக்கும் இலக்கிய விழாவுக்கு புத்தக பிரியர்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் கூடியிருக்கிறார்கள். ஆனால், அந்த விழாவை புறக்கணிப்பதாக அங்கு வந்திருந்த தென்னாப்பிரிக்க எழுத்தாளர் தாமுன் ஹல்கட் அறிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் குறித்த நிலைமையை காரணம் காட்டி அவர் அந்த விழாவை புறக்க்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
பாரிசை தளமாகக் கொண்ட செய்தியாளர்களுக்கான அமைப்பான ரிப்போர்ட்டர் சான் பிரண்டையர்ஸ் மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையின் செய்தியாளர்கள் அமைப்பு ஒன்று ஆகியன வெளியிட்ட விழாவைப் புறக்கணிப்பதற்கான அழைப்பை தாமுன் ஹல்கட் கவனத்தில் எடுத்திருக்கிறார். இந்த அமைப்புக்களுடன் சேர்ந்து சில பிரபல எழுத்தாளர்களும் இந்த அழைப்பை விடுத்திருந்தனர்.
விழா ஆரம்பித்தவுடனே, பிரபல எழுத்தாளர் தாமுன் ஹல்கட் விழாவைப் புறக்கணிக்க முடிவு எடுத்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தார்கள்.
இலங்கையில் மாற்றுக் கருத்தாளர்களின் குரல்கள் அடக்கப்படுவதால், அங்கு இந்த நிகழ்வை நடத்துவது உகந்ததல்ல என்று அந்த விழாவைப் புறக்கணிக்குமாறு கோரியவர்கள் கேட்டிருந்தனர்.
இலங்கையில் மனித உரிமைகள் குறித்த சில பிரச்சினைகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட விழாவின் ஏற்பாட்டாளரும், எழுத்தாளருமான ஷியாம் செல்வதுரை, ஒரு இலக்கிய விழாவை நிறுத்துவது அதற்கான பதிலாகாது என்று கூறினார்.
வேறு இரண்டு முக்கிய எழுத்தாளர்களும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் இருந்து பின்வாங்கியிருக்கிறார்கள். ஆனால், அது இந்த எதிர்ப்புடன் சம்பந்தப்பட்டதல்ல என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
அறுபதுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
ஆனால், தமது எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு இணையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக புறக்கணிப்பவர்கள் கூறுகிறார்கள்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’