வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 27 ஜனவரி, 2011

கருப்புப் பணம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன-மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

ருப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசுக்கு பிடி மேலும் இறுகியுள்ளது. இதுதொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. கருப்புப் பணம் குவித்து வைத்துள்ளோர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ரூ. 70 லட்சம் கோடி அளவுக்கு கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ளனர். இதை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ராம்ஜேட்மலானி உள்ளிட்டோர் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ஜெர்மனியின் லிச்சன்ஸ்டைன் வங்கியில் போட்டு வைத்துள்ள கருப்புப் பண முதலைகள் குறித்த பட்டியலை அந்த வங்கி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இதை முழுமையாக சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் குறிப்பிட்ட சில பெயர்களை மட்டும் மத்திய அரசு கொடுத்துள்ளது. இதுதொடர்பாக சட்ட சிக்கல்கள் இருப்பதால் முழுப் பட்டியலை பகிரங்கமாக வெளியிட முடியாது என்று மத்திய அரசு பதிலளித்தது.
ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. முழுப் பட்டியலையும் மத்தியஅரசு கொடுத்தேயாக வேண்டும். இது சாதாரணப் பிரச்சினை இல்லை.நாட்டின் பொருளாதாரத்தை கொள்ளையடித்துள்ளனர். அதை மறைக்கப் பார்க்கிறது மத்திய அரசு என்று கடுமையாக சாடியிருந்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கருப்புப் பண விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.
கருப்புப் பணம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடித்தீர்களா. ஆயுதக் கடத்தல் மூலம் வருகிறதா, போதைப் பொருள் கடத்தல் மூலம் வருகிறதா என்பதையெல்லாம் கண்டுபிடித்தீர்கள். இது மிகவும் சீரியஸான விவகாரம்.
யாரோ பெயர் தெரியாதவர்கள் குறித்து நாங்கள் பேசவில்லை. யாரெல்லாம் கருப்புப் பணத்தைக் குவித்துள்ளனர் என்ற பட்டியல் உங்களிடம் (மத்திய அரசு) உள்ளது. அதை வைத்துக் கொண்டு என்ன செய்தீர்கள் என்பதை தெரிவித்தாக வேண்டும். இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே சட்டம்தான். எனவே கருப்புப் பண முதலைகள் குறித்து நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கடும் காட்டத்துடன் கூறினர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த கிடுக்கிப் பிடியைத் தொடர்ந்து விரைவில் மத்திய அரசு மேலும் ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கருப்புப் பணம் பெருமளவில் குவித்து வைக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதைக் குவித்து வைத்திருப்போர் குறித்த பட்டியலை வெளியிட முடியாது என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மத்திய அரசுக்கு இன்று உச்சநீதிமன்றம் கிடுக்கிப் பிடி போட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’