வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 ஜனவரி, 2011

வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தும் செயற்திட்டங்கள் தொடரும் - ஜனாதிபதி தெரிவிப்பு!

வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் வீதி அபிவிருத்தி கல்வி வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளும் தொடர்ச்சியாக சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.


இன்றைய தினம் பூநகரி சங்குப்பிட்டி புதிய பாலத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தப் பாலம் அமைக்கப்படுவதற்காக நீண்டகாலமாக அடிக்கற்கள் நாட்டப்பட்டிருந்த போதிலும் பாலத்தின் வேலைகள் நடைபெறாத நிலையில் எமது அரசின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான பணிகளால் இப்பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாள் நிச்சயம் அனைவருக்கும் ஒரு சந்தோசமான நாளாகும் என்பதுடன் வடபகுதி மக்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டிலுள்ள அனைவருக்கும் சந்தோசத்தை தரும் நிகழ்வாக அமைந்துள்ளது.

இதுவரையில் ஏ-9 பாதை தான் வடபகுதிக்கான ஒரேயொரு தரைவழிப்பாதையாக இருந்தது. ஆனால் தற்போது ஏ-32 பாதையும் திறந்து வைக்கப்பட்டள்ளது மட்டுமல்லாமல் இப்பாதையூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான ஏ-32 வழிப் பயணத்தின் போது 87 கிலோ மீற்றர் தூரம் குறைவாகின்றதையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் மற்றுமொரு அபிவிருத்தி பணியாகவே இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

எமது அரசின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடபகுதியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம் என்பதுடன் நாம் சொல்வதையே செய்கின்றோம், செய்வதையே சொல்கின்றோம்.

குறிப்பாக வடபுகுதி வீதி அபிவிருத்தி திட்டங்கள் கல்வி வசதிகள் வீட்டுத் திட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வாறே தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் வசதி குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் மேம்படுத்தும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்றுவதற்கு நீங்கள் யாவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பும் ஒத்தாசையும் வழங்க வேண்டும்.

இங்கு வருகை தந்து உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்ளும் அதேவேளை உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களுடன் நல்லதொரு சுபீட்சமான வளமான எதிர்காலம் மலரவும் வாழ்த்துகிறோம் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக அங்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திசிறி ஆகியோர் வரவேற்றனர்.

மேற்படி பாலத்தின் பெயர்ப்பலகையினை ஜனாதிபதி திரை நீக்கம் செய்து வைத்ததுடன் பாலத்திற்கான நாடாவை வெட்டி அதனூடான போக்குவரத்தையும் சம்பிரதாயமாக தொடக்கி வைத்தார்.

பாலத்தினூடாகப் பயணித்த ஜனாதிபதி உட்பட்ட பிரமுகர்கள் கேரதீவுப் பகுதியில் அமைக்கப்பட்ட சிறப்பு அரங்கத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வரவேற்புரையாற்றும் போது கடந்த காலங்களில் எமது மக்கள் அனுபவித்து வந்த துன்ப துயரங்கள் எல்லாம் தற்போது சூரியனைக் கண்ட பனிபோல அகன்று விட்டன.

இந்நிலையினை ஏற்படுத்தித் தந்த ஜனாதிபதி அவர்களுக்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மகாதேவ தாம்போதி என்ற இந்தப் பாலம் யாழ் மாவட்ட மக்களுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுக்கும் உறவுப் பாலமாக அமையும் என்றும் மக்களின் நீண்டகால கனவு இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என்றும் தெரிவித்தார்.

288 மீற்றர் நீளமான சங்குப்பிட்டிப் பாலம் 7 மீற்றர் அகலம் உடையதுடன் ஆயிரத்து 32 மில்லியன் ரூபா செலவில் வடக்கின் வசந்தம் செயற்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் பணிப்பாளருமான பிரேமசிறி மற்றும் துறைசார்ந்த உயர் பிரதிநிதிகளும் முப்படைத் தளபதிகள் பொலிஸ்மா அதிபர் கிளிநொச்ச்சி யாழ் மாவட்ட அரச அதிபர்கள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.




























F

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’