பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஒரு தொகுதி தகரம் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி அவர்கள் இன்று கையளித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
வடமாகாண ஆளுநரின் யாழ்.செயலகத்தில் மேற்குறிப்பிட்ட பொருட்கள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5000 கூரைத்தகடுகளும் 26 துவிச்சக்கர வண்டிகளும் ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் ஆளுநரால் இவை வழங்கப்பட்டுள்ளன.
இக் கையளிப்பு நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் பிராந்திய ஆணையாளர் திருமதி சிவலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
இதேவேளை இத்துவிச்சக்கர வண்டிகள் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த 26 முன்பள்ளி ஆசிரியைகளுக்கு ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி ஆகியோரால் கையளிக்கப்பட்டன.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 20 ம் திகதி வடமராட்சி கிழக்குப் பகுதிக்கு சென்றிருந்த போது அங்குள்ள முன்பள்ளி ஆசிரியைகள் தங்களது பிரயாண வசதி கருதி தங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் தேவையென அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாகவே இன்றைய தினம் இத் துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’