உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இந்தியாவின் முக்கியமான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டிகளுக்கு முன்னார் தயாராகாது என் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டி வேறு ஒரு மைதானத்துக்கு மாற்றப்படுகிறது.
எனினும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள மும்பையின் வான்கடே மைதானம் போட்டிக்கு தயார் நிலையில் இருக்கிறது என்றும் அங்கு சிறிய பணிகளே எஞ்சியுள்ளன என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அரங்குகளை ஆய்வு செய்யும் குழுவானது போட்டிகள் நடைபெறவிருந்த ஐந்து மைதானங்களின் தயார் நிலை குறித்த தனது அறிக்கையை வியாழக்கிழமை(27.1.2011) வெளியிட்டது.
இந்தக் குழுவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் போட்டிகளுக்கான இயக்குநருமான ரத்னாகர் ஷெட்டியும் இடம்பெற்றிருந்தார்.
இலங்கையில் போட்டிகள் நடைபெறவிருந்த மூன்று அரங்குகளை ஆய்வு செய்த இந்தக் குழு அவை எஞ்சியிருக்கும் சிற்சில பணிகளை குறித்த நேரத்தில் முடிக்கும் பட்சத்தில் போட்டிகள் அங்கு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள பிரேமதாச விளையாட்டரங்கம், கண்டியிலுள்ள பலேகலே விளையாட்டரங்கம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ் சர்வதேச விளையாட்டரங்கம் ஆகியவற்றிலுள்ள மைதானங்களில் போட்டிகள் இடம் பெறவுள்ளன.
கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் விளையாட்டு மைதானம் சுமார் 90,000 போர் போட்டிகளை காணும் வசதியைக் கொண்டது. அந்த அரங்கில் புனரமைப்பு பணிகள் இன்னும் முடியவில்லை. அங்கு இந்த உலகக் கோப்பை போட்டியின் போது நான்கு ஆட்டங்கள் நடைபெறவிருந்த நிலையில், இந்தியா விளையாடும் முதல் போட்டி அங்கு நடைபெறாது என்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை வேறு மைதானத்தில் நடத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
எனினும் ஈடன் கார்டன்ஸில் மற்ற மூன்று போட்டிகளும் நடைபெறும் என்று கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதிக்கு முன்னர் அனைத்து விளையாட்டரங்கங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’