ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து நாம் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி குறித்து எமது மக்கள் நம்பிக்கை இழக்கத்தேவையில்லை என்றும் நல்ல தீர்ப்பு கிடைக்கும் நம்பிக்கையோடு காத்திருங்கள் என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் தேர்தலுக்காக தேர்தல் காலத்தில் மட்டும் செயற்படுகின்ற ஒரு கட்சி அல்ல. ஆயினும் தேர்தல்கள் வரும்போது அவைகளில் போட்டியிட்டு அதில் கிடைக்கின்ற அரசியல் அதிகாரங்களை சரிவரப்பயன்படுத்தி எமது மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைச் சிறப்புடன் நாம் ஆற்றி வருகின்றோம்.
இந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் எமது கட்சிக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்து எமது வரலாற்று வாழ்விடங்களைத் தூக்கி நிறுத்த கரம் கொடுத்து உதவுவோம் என்று உற்சாகத்துடன் காத்திருந்த எமது மக்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையினால் துயரத்தில் சோர்வடைந்து நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.
எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து சட்ட ரீதியாக அணுகுவதில் சாத்தியம் உண்டு என்று நம்பும் நாம் இது குறித்து வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்திருக்கின்றோம். நீதியின் தீர்ப்பும் மக்களின் தீர்ப்பும் எமது நேர்மைக்கும் உழைப்பிற்கும் வெற்றிகளை வழங்கியே தீரும்! சத்தியங்கள் சாகாவரம் பெற்று வாழும்!
எதிர்பார்த்திருக்கும் நீதிமன்ற தீர்ப்பானது எமது மக்களின் வெற்றியாக அமையும் என்றே தாம் நம்புகின்றோம். எந்தவொரு சூழலிலும் எமது மக்களின் உரிமைக்கும் சேவைக்குமான உழைப்பும் பணியும் தடையின்றி தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’