வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 19 ஜனவரி, 2011

நீண்டகாலமாக குடியிருக்கும் சங்கானை மக்களுக்கு காணியை பகிர்ந்தளிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை..!

லிகாமம் மேற்கு சங்கானை அராலி வீதியிலுள்ள அம்பாள் சனசமூக நிலையப் பகுதியில் நீண்ட காலமாக குடியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு அக்காணிகளைப் பகிர்ந்தளிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை அக்குடியிருப்பாளர்கள் அமைச்சரவர்களைச் சந்தித்த நிலையில் இன்றைய தினம் மாலை மேற்படி பிரதேசத்தில் வசித்து வரும் மக்களின் சார்பில் தலைவர் கந்தசாமி தவராசா செயலாளர் கு.ரஞ்சித்குமார் தலைமையிலான பிரதிநிதிகள் அமைச்சரின் யாழ் பணிமனைக்கு வருகை தந்து தமது நீண்டகால கோரிக்கை குறித்து தெரியப்படுத்தினார்கள். சுமார் 35 குடும்பங்கள் ஏறக்குறைய 35 வருட காலமாக மேற்படி அரச காணியில் குடியிருப்பதாக தெரிவித்த அவர்கள் இதனடிப்படையில் அக்காணியை தமக்கு பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இச்சமயம் வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி பாபு வலிகாமம் மேற்கு பிரதேச சபை செயலாளர் புத்திசிகாமணி வலி.மேற்கு பிரதேச சபை உதவிச் செயலாளர் எஸ்.சந்திரமௌலி ஆகியோரும் உடனிருந்தனர். இச்சமயம் பிரதேச செயலாளரினால் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஏற்கனவே அனுமதிப் பத்திரம் உள்ளோர் 2006ம் ஆண்டிற்குப் பின்னர் அங்கு குடியேறியோர் வேறு பகுதியில் சொந்த காணி உள்ளோர் சொந்தக் காணியில் வீடு உள்ளோர் மற்றும் அனுமதிப் பத்திரம் இன்றி குடியிருப்போர் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். இதனடிப்படையில் முன்னுரிமை அடிப்படையில் ஏற்கனவே அனுமதிப் பத்திரம் உள்ளோருக்கும் 2006ம் ஆண்டிற்குப் பின்னர் குடியேறியோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் காணி பகிர்ந்தளித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு தெரிவித்தார். மேலும் நாளைமறுதினம் தான் நேரடியாகவே அக்குடியிருப்பு பிரதேசத்திற்கு வருகை தந்து குடியிருப்பாளர்களை சந்திப்பதாகவும் அமைச்சரவர்கள் உறுதியளித்தார்.

மேற்படி சந்திப்பின்போது ஈபிடிபியின் வலிகாமம் மேற்கு அமைப்பாளரும் முன்னாள் வலிகாமம் மேற்கு பிரதேச சபைத்தலைவருமான வள்ளுவன் மகேந்திரன் சிரேஷ்ட உறுப்பினர் தவராசா ஆகியோரும் உடனிருந்தனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’