வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 19 ஜனவரி, 2011

ஜனாதிபதியின் ஆணைக்குழுக்களில் இராணுவம் தலையிடாது: இராணுவப் பேச்சாளர்

னாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் இராணுவம் தலையிட்டதில்லை எனவும் இனி தலையிடவும் மாட்டாது எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மெதவல தெரிவத்தார்
.பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மன்னாரில் விசாரணை அமர்வை நடத்தியமை குறித்து இராணுவம் கேள்வி எழுப்பியதாக 'நாம் இலங்கையர்கள்' அமைப்பின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவரும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளருமான உதுல் பிரேமரட்ண குற்றம் சுமத்தியிருந்தார்.
இது தொடர்பாக கேட்டபோதே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'இத்தகைய விடயங்களில் நாம் எவ்வாறு தலையிட முடியும? இராணுவம் பெரியதொரு அமைப்பாக இருந்போதிலும் இத்தகைய விடயங்களில் நாம் தலையிடுவோம் என்று அர்த்தமல்ல' என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’