மனிதக் கடத்தலில் ஈடுபடுவோர், தமிழ் புலி இயக்கத்தவரையும் கொண்டிருக்கக்கூடிய 400 வரையிலான இலங்கையர்களை தென்கிழக்கு ஆசிய நாடொன்றிலிருந்து கனடாவுக்கு கடத்தும் ஆயத்தங்களை செய்துகொண்டிருப்பதாக புலனாய்வு உத்தியோகத்தர்கள் கனேடிய அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இரண்டு வெவ்வேறான கடத்தல் குழுக்கள், இரண்டு கப்பல்களை ஏற்பாடு செய்து வருகின்றன. இவர்கள் இரண்டு தென்கிழக்கு துறைமுகங்களிலிருந்து கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பிய கரைக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். 'இவர்கள் 200, 300 பேரை கொண்டு செல்லக்கூடிய கப்பல்களை தேடி வருகின்றனர்.'
'எமக்கு தெரிந்தது இந்த இரண்டு கடத்தல் குழுக்களின் நடவடிக்கைகள் மட்டும் தான். இன்னும் பல இருக்கக்கூடும.;'
ஏற்கெனவே சில பயணிகள் கப்பலேறும் இடத்திற்கு அண்மையாக நகர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் எப்போது கப்பல் வருமென ஆவலாக காத்திருக்கின்றனர்.
இவர்களுக்குள் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இருப்பார்களென கனேடிய அதிகாரிகள் நம்புகின்றனர்.
பயணத் திகதி வானிலையில் தங்கியுள்ளது. அநேகமாக இது மார்ச் மாதமாக இருக்கலாம்.
கடந்த ஒகஸ்ட்டில் எம்.வி.சன்.சீ கப்பலில் அகதிகள் கனடாவுக்கு வந்தனர். 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 'ஒசன்லேடி கப்பல் 76 இலங்கையருடன் வந்தது.
நாம் இந்த கப்பல்களை கடலில் தடுக்க முற்பட்டால் அது பிரயாணிகளின் உயிருக்கு ஆபத்தாக இருக்கலாம். இவர்களைப் பற்றி கடத்தல்காரர்கள் கவலைப்படப் போவதில்லை.
பணம் தான் அவர்களுக்கு முக்கியமென கனேடிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’