யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற கொலை, கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை கொண்டு வந்த கவனயீர்ப்பு பிரேரணைக்கு உடனடியாக பதிலளிப்பதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது.
பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான மாவை சேனாதிரõஜா மேற்படி கவனயீர்ப்புப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார்.
இந்த கவனயீர்ப்பு பிரேரணையை நேற்று (நேற்று முன்தினம்) முன்வைப்பதற்கு முயற்சித்தோம்.
எனினும் பிரேரணையை சிங்கள மொழியில் மெõழிப்பெயர்ப்பு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தினால் இன்று (நேற்று) சமர்ப்பிக்கின்றோம் எனக் கூறினார்.
யாழ். குடாநாட்டில் அதுவும் இராணுவத்தின் பாதுகாப்பில் இருக்கின்ற பிரதேசங்களில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பில் பிரதமர் இன்று (நேற்று) பதிலளிக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா எம்.பி.கேட்டுக் கொண்டார்.
கவனயீர்ப்பு பிரேரணைக்கு பதிலளிக்கும் வகையில் எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, இந்த பிரேரணை பற்றி ஏற்கனவே ஆளும் தரப்பிற்கு முறையாக அறியத்தரப்படவில்லை எனினும் பிரேறணை இன்று (நேற்று) முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பில் உடனடியாக பதிலளிக்க முடியாது எனக் கூறிவிட்டார்.
கவனயீர்ப்பு பிரேரணையை சமர்பித்த மாவை சேனாதிராஜா எம்.பி. யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பில் அவை இடம்பெற்ற இடம், திகதிகளை குறிப்பிட்டு முன்வைத்ததுடன் இது அவசர பிரச்சினை என்பதனால் இவை பற்றி மூத்த அமைச்சர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய நடவடிக்கைகளை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இது தொடர்பில் பிரதமர் இன்றே (நேற்று) பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
உடனடியாக பதிலளிக்குமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்த சபை முதல்வர் பிரேரணையின் பிரதி எமக்கு முன்கூட்டியே வழங்கப்படவில்லை. அது மட்டுமல்லாது பல்வேறு குறறச்சாட்டுக்களும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன. இது பற்றி நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவ்வாறான நிலைமைகளில் இதற்கு பதிலளிக்க முடியாது என்றார்.
எனினும் பிரேரணை ஏற்கனவே பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சமர்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அதனை ஆளும் தரப்பிற்கு வழங்க வேண்டியது செயலாளர் நாயகத்தின் பொறுப்பு என சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. இதன்போது சுட்டிக்காட்டினார்.
இடைமறித்த சபை முதல்வர் செயலாளர் நாயகத்திற்கு அதை சமர்ப்பித்திருந்தாலும் சபை முதல்வரின் அலுவலகத்திற்கும் பிரதியொன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டினார். பிரதியை வழங்க வேண்டியது செயலாளர் நாயகத்தின் கடமையல்ல என்று சபாநாயகரும் சுட்டிக் காட்டினார்.
வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் எழுந்த கூட்டமைப்பு எம்.பி. க்கள் சிலர் உடனடியாக பதிலளிக்க வேண்டும் எனக் கோரி நின்றார்கள். இதன்போது எழுந்த சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா உடனடியாக பதிலளிப்பது என்றால் குற்றச்சாட்டுக்களை மறுக்கவேண்டியிருக்கும். அவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே ஆராய்ந்து அரசாங்கம் பதிலளிக்கும் என்று கூறுகின்றோம் என்றார்.
இதனிடையே எழுந்த சுமந்திரன் எம்.பி. நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் பிரேரணை சமர்ப்பிக்கப்ட்டிருப்பதாக சுட்டிக் காட்டினார்.
விடயதானத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு முன்கூட்டியே வழங்கியிருக்க வேண்டும் என சுட்டிக் காட்டிய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எவ்வாறு இருப்பினும் பிரேரணை தற்போது சமர்ப்பிக்கப்பட்டு விட்டமையினால் இதற்கான பதிலை அரசாங்கம் பிரிதொரு தினத்தில் வழங்க முடியும் என தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’