வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 6 ஜனவரி, 2011

புலிகளிடம் இன்னும் 8 கப்பல்கள்

மிழீழ விடுதலைப் புலிகளிடம் தற்போதும் 8 கப்பல்கள் இருப்பதாகவும் மனிதக் கடத்தல்கள் உட்பட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அவை பயன்படுத்தப்படுவதாகவும் அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், அரசாங்கத் தரப்பு பிரதம கொறடாவான தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட போதிலும் அதன் சர்வதேச வலையமைப்பு இன்னும் பாதிக்கப்படாமல் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
புலிகளிடம் 20 கப்பல்கள் இருந்தபோதிலும் அவற்றில் எதுவும் அவ்வமைப்பின் பெயரில் பதிவு செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
அண்மையில் கனடாவுக்கு இலங்கையர்களை கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஈஸ்வரி எனும் கப்பலும் அவற்றில் ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’