வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

இலங்கை பணிப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டவர் விடுதலை

லங்கை பணிப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட குவைத் பிரஜையொருவரை அந்த நாட்டு குற்றவியல் நீதிமன்றம் நிரபராதியென அறிவித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த பணிப்பெண்ணின் சார்பில் வீட்டு ஆட்சேர்ப்பு முகவர் நிலையம் மேற்படி வழக்குத் தாக்கலை செய்திருந்தது.
சந்தேக நபர் தனது மனைவியுடன் புடவை வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தபோது, பணிப்பெண்ணிடம் அப்புடவையை அணியுமாறு கேட்டிருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்புடவையை அணிவதற்கு தான்; மறுப்புத் தெரிவித்ததாகவும் இதனையடுத்து, தன்னைத் தொடர்ந்து தனது அறைக்கு வந்த சந்தேக நபர் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் பணிப்பெண் புகாரிட்டார்.
பின்னர் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்காக அப்பெண்ணை ஆட்சேர்ப்பு முகவர் நிலையத்திற்கு சந்தேக நபர் அனுப்பிவைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அச்சம் காரணமாக ஆட்சேர்ப்பு முகவர் நிலையத்திற்கு பணிப்பெண் அறிவிக்கவில்லையென்பதுடன்,; ஆனாலும் இலங்கைத் தூதரகத்திற்கு தெரிவித்ததாகவும் அப்பணிப்பெண் கூறினார்.
இதேவேளை, குறித்த பணிப்பெண்ணின் கூற்றுக்களில் நிவர்த்தி செய்ய முடியாத பல குழப்பங்கள் காணப்படுவதாக சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
குறித்த பணிப்பெண்ணுடன் உரையாட முடியாத நிலையில், அவரை திருப்பியனுப்புமாறு சந்தேக நபரின் மனைவி கோரியுள்ளதாக அச்சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’