வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 1 ஜனவரி, 2011

வடமராட்சி கிழக்கில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

டமராட்சி கிழக்கு குடத்தனையில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு 9.15 மணியளவில் குடத்தனை மேற்கு நியூட்டன் கல்வி நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் தபாலகத்தில் ஊழியராகக் கடமையாற்றும் தேவராசா கேதீஸ்வரன் (வயது 28) என்பவராவார்.

வீட்டில் அனைவரும் நித்தரைக்குச் சென்று கொண்டிருந்தவேளை தலைக்கவசம் அணிந்து கைத்துப்பாக்கி மற்றும் கொட்டனுடன் வந்த இருவர் வீட்டில் லப்டப் கம்பியூட்டர் இருக்கிறதா? எனக் கேட்டதுடன் அனைவரையும் ஆயுத முனையில் நிறுத்தி வைத்துக் கொண்டு வீட்டையும் சோதனையிட்ட பின்னர் (சிவப்பு மேற்சட்டை அணிந்திருந்த ஆயுததாரி) கேதீஸ்வரனைச் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 11.40 மணியளவில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை நேற்று மாலை 6.15 மணியளவில் புலோலி காந்தியூர் கிராமத்தில் 48 வயதுடைய யோகநாதன் புஸ்பதேவி என்ற 06 பிள்ளைகளின் தாயார் வான் ஒன்றில் வந்த ஆயுதம் தரித்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார். இது குறித்தும் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’