வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 1 ஜனவரி, 2011

பிறக்கும் புத்தாண்டில் எமது மக்களின் வாழ்வும் சிறக்கும்!... புதிய சிந்தனைகள் எங்கும் ஒளி வீச உழைப்போம்!!....

பிறக்கின்ற புத்தாண்டில் எமது மக்களின் வாழ்வு சிறக்கவும் மக்களின் மனங்கள் அகம் மகிழ்ந்து சிரிக்கவும் முடிந்த புதிய சூழல் ஒன்றை உருவாக்குவோம் என்றும் சகல வன்முறைகளும் ஒழிந்து சகல மக்களும் நம்பிக்கையோடும் உரிமையோடும் முகமுயர்த்தி வாழும் காலமே எமது இலட்சியம் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் கழிந்து போன காலங்களை விடவும் இனி வரும் காலங்களில் புதியதொரு சூழலுக்குள் நாம் அனைவரும் செல்ல வேண்டும். கடந்த காலங்களில் பெரும் புயலையே எதிர்கொண்ட எமது மக்களால் இனி வரும் சூழல் எதுவாயினும் அதை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும்.

ஒவ்வொரு தனிமனித வாழ்வின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கும் எதிராக சிறு சிறு தடைகள் அச்சுறுத்தல்கள் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அவைகள் யாவும் சகல மக்களினதும் ஒன்றுபட்ட உழைப்பின் மூலம் அகற்றப்பட வேண்டும்.

இனி இங்கு யுத்தம் இல்லை. இரத்தம் சிந்தும் நிலையும் இல்லை என்ற நம்பிக்கைகள் பிறந்திருக்கும் ஆரோக்கியமான இன்றைய சூழலில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு போன்றவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்தி குற்றச்செயல்களில் இருந்து முழுமையாக விடுபடும் ஜனநாயக மயப்படுத்தப்பட்ட பூமியாக எமது வரலாற்று வாழ்விடங்கள் யாவும் மாற்றப்பட வேண்டும்.

இடம்பெயர்ந்து மீளக்குடியேறியிருக்கும் மக்கள் யாவரும் ஏனைய மக்களைப் போலவே வாழ்வியல் உரிமைகள் சகலதையும் மேலும் அனுபவிக்கவும் இன்னமும் மீளக்குடியேறாமல் எஞ்சியுள்ள மக்களையும் மீளக்குடியமர்த்தும் சூழலை விரைவாக உருவாக்கவும் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பிரதேசங்களில் எஞ்சியுள்ள பிரதேசங்களையும் எமது மக்களின் குடியிருப்பு நிலங்களாக மாற்றி அமைக்கவும் நாம் தொடர்ந்து துரிதமாக செயற்பட்டு வருகின்றோம். பிறக்கின்ற புத்தாண்டில் இவைகள் யாவும் முழுமையாக பூர்த்தியடைந்து விடும் என்று நாம் நம்பிக்கை கொள்வோம்.

இது தவிர பிறக்கின்ற புத்தாண்டு எமது வாழ்விடங்களை இன்னமும் தூக்கி நிறுத்தும் அபிவிருத்தி ஆண்டாகவும் நடைமுறைச் சாத்தியமான சமாதான வழிமுறையில் அரசியலுரிமைகளை பெற்றுக்கொள்ளும் புதியதொரு காலச்சூழலாகவும், இல்லாமை என்பது இல்லாதொழிக்கப்பட்டு சகல மக்களும் சகலதையும் பெற்றுக் கொண்டாடும் மகிழ்ச்சி ஆண்டாகவும் மலரட்டும்.

பிறக்கின்ற புத்தாண்டை புதியவாழ்வு அரும்பவும் புதிய சிந்தனைகள் எங்கும் ஒளி வீசவும் யாவரும் இங்கு சமன் என்ற சமவுரிமை வாழ்வு சிறக்கவும் அர்த்;தமுள்ள ஆண்டாக உருவாக்க சகல மக்களும் அரசியல் தலைமைகளும் ஒருமித்து உழைக்க முன்வரவேண்டும் என்று தெரிவித்திருப்பதோடு இதுவரை காலமும் தீரா பிரச்சினையாக இருந்து வரும் எமது அரசியல் உரிமை பிரச்சினையானது கடந்தகால தலைமைகளால் அடுத்தடுத்த சந்ததியினரின் மீது துயரங்களாக சுமத்தி விட்டு செல்லப்பட்டது போலன்றி நாம் வாழும் இன்றைய தலைமுறையோடு சகல பிரச்சினைகளும் தீர்ந்து போவதற்காக நடைமுறைசாத்தியமான வழிமுறையை சகலரும் நாடும் ஒளிமயமான ஒரு ஆண்டாக புதிய ஆண்டு பிறக்கட்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’