யுத்த காலத்தில் காயமடைந்த நிலையில் பதவியா வைத்தியசாலைக்கு வந்த சுமார் 5,000 அல்லது 6,000 பேரிடம் நாங்கள் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டோம்.
சிகிச்சை நிறைவுபெற்றதும் அவர்களை வவுனியா முகாம்களுக்கு அனுப்பிவைத்தோம். மேலும், காயமடைந்த நிலையில் வந்த 146 பேர் பதவியா வைத்தியசாலையில் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பலரது சடலங்களை அரசாங்கச் செலவில் நல்லடக்கம் செய்தோம் என்று யுத்த காலத்தில் பதவியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய ஆர். கும்புறுகம தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’