யாழ் மத்திய கல்லூரியில் நாளை ஆரம்பமாகி நடைபெறவுள்ள காலத்திற்கேற்ப உற்பத்தித் திறன் 2011 கண்காட்சி முன்னேற்பாடுகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ள இக்கண்காட்சி நாளை (10) முதல் 12ம் திகதி வரை 3 நாட்களும் நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் மட்பாண்டம் தும்பு துணி பற்றிக் உலோகம் பனை ஓலை மரம் உள்ளிட்ட பொருட்களிலான ஆக்கப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இதன் போது தேசிய வடிவமைப்புச் சபையின் பணிப்பாளர் விஜயக்கோன் யாழ் மாவட்டப் பணிப்பாளர் சிவகெங்காதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’