இன்று (22) பிற்பகல் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் தென்னை பயிர்ச்செய்கை அபிவிருத்தி சபையின் பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
முன்னதாக அலுவலகத்தின் நினைவுக் கல்வெட்டினை தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஸ்பகுமார அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார் அதனை தொடர்ந்து ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
பிரதேசத்தின் தென்னை பயிர்ச் செய்கை அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்நிகழ்வில் பளை பிரதேச செயலர் முகுந்தன் தெனனை பயிர்ச்செய்கை அபிவிருத்தி சபை தலைவர் சரத் கீர்த்திரத்தன அதன் பிரதி பொதுமுகாமையாளர் வீரகொட மற்றும் உத்தியோகத்தர்கள் பிரதேச இராணுவ அதிகாரி லெப்.கேணல் யகம்பத் பிரதேச பொலிஸ் அதிகாரி ஆகியோர் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’