பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில் கைப்பணிப் பொருட்கள் சந்தைப்படுத்தல் கிராமம் இன்று பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய அருங்கலைகள் பேரவையினால் பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கைப்பணிப் பொருட்கள் சந்தைப்படுத்தல் கிராமத்தை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவர டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, அவர்களும் விடுத்த அழைப்பின் பேரில் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்~ அவர்கள் நினைவுக் கல்லினை தீரைநீக்கம் செய்து வைத்து திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக். கே. காந்தா கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவர்களுடன் கலாசார மற்றும் கலை விவகார அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க, தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய உயர்கல்வி பிரதியமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க, ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக பிரதம அதிதியையும் கௌரவ அதிதிகளையும் ஏனையோரையும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் பிரதியமைச்சர் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
நினைவுக்கல் திரைநீக்கத்தை அடுத்து அதிதிகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த கைப்பணிப் பொருட்களைப் பார்வையிட்டதுடன் துறைசார்ந்தவர்களுடனும் கலந்துரையாடி அவை தொடர்பான விளக்கங்களையும் கேட்டறிந்து கொண்டனர்.
தொடர்ந்து அதிதிகள் கிராமிய கலைகள் கேந்திர நிலையத்தில் தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் புத்தி கீர்த்தி சேன தலைமையில் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர்.
அங்கு இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கேகாந்தா மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரதியமைச்சர் வீரகுமார திஸநாயக்க உரையாற்றியதைத் தொடர்ந்து சிறப்புரையினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்~ நிகழ்த்தினார்.
அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்கா அவர்கள் அமைச்சரின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் புத்தி கீர்த்திசேன ஆகியோர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்~ அவர்களுக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தனர்.
இதனிடையே பத்தரமுல்லை கைப்பணிப் பொருட்கள் சந்தைப் படுத்தல் கிராமத்தில் இருந்து பொரளை வரை செல்லும் பேரூந்து போக்குவரத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத் தக்கது.
நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்கு கீழான துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’