வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 டிசம்பர், 2010

இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்கவில்லை – கடற்படைப் பேச்சாளர்

ந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை என கடற்படைப் பேச்சாளர் அத்துல செனரத்  இணையத்தளத்துக்கு சற்றுமுன் தெரிவித்தார்.
கச்சத் தீவு அருகே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை கடற்படையினர் தாக்கியதாக இந்திய இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
தாம் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் மீன்பிடி வலைகளை கடற்படையினர் வலையை கிழித்துக் கடலில் வீசியதாகவும் மீனவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இது தொடர்பாக இலங்கைக் கடற்படையின் பேச்சாளருடன் தொடர்புகொண்டு கேட்டபோது இச்செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் கடற்படையினர் அவ்வாறு தாக்குதலொன்றை மேற்கொள்ளவில்லை என்றும் எமக்குத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’