வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 டிசம்பர், 2010

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் என்ற தகவலில் உண்மையில்லை: ஆளும் தரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

லங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்படவேண்டும் என அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள்,
விநாயகமூர்த்தி முரளீதரன் - பிரதியமைச்சர் (மீள்குடியேற்றம்)
வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் தேசிய கீதமானது ஒரு மொழியிலேயே பாடப்படுகிறது. ஆனால் இலங்கை அரசியல் அமைப்பின் படி இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடும் முறை உள்ளது.
இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தீர்மானமானது நம்பகத் தன்மையற்றதாகும்.

பி.திகாம்பரம் - நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்படும் என்ற தகவல் உண்மையற்றது. அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படுமாயின் எமது எதிர்ப்பை நாம் வெளியிடுவோம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’