போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் பல குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் அக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு சர்வதேச மட்டத்தில் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தியத்தலாவை இராணுவ கல்லூரியின் பயிற்சி பெற்ற 253 அதிகாரிகள் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது,
'இராணுவத்தினர் நாட்டில் அமுலிலுள்ள சட்டங்கள் மற்றும் இராணுவ சட்டங்களுக்கு உட்பட்டவர்கள். அதனால் அந்த சட்டங்களுக்குட்பட்ட தண்டனைகளை அவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். எந்தளவுக்கு திறமையானவராயினும் நாட்டின் மீது பற்று இல்லாவிடின் அவர் உயர்ந்தவரல்லர்.
பழிவாங்கும் எண்ணத்துடன் மனிதாபிமானத்துக்கு எதிராக எவருக்கும் எந்தவித தண்டனைகளும் வழங்கப்படக் கூடாது. இதேவேளை, யுத்தம் முடிந்துவிட்டாலும் அபிவிருத்தியின் மூலம் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’