வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 21 டிசம்பர், 2010

படுவான்கரைப் பிரதேசத்தில் யானைகள் அட்டகாசம்: மக்கள் அச்சம்

டுவான்கரைப் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளமையினால் படுவான்கரை மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை முனைக்காடு பிரதேசத்தில் யானை தாக்குதல் நடத்தியதில், மீனவர் ஒருவருடைய தோணி ஒன்று முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
முனைக்காடு பிரதேசத்தினூடாகச் செல்லும் காஞ்சிரங்குடா ஆற்றில் நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
வழமைபோல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த முனைக்காட்டைச் சேர்ந்த கருணாகரன் என்பவர் முதலை என நினைத்து தனது தோணியில் சவளால் அடித்த வேளை யானை அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்கிய யானை ஆற்றைக்கடந்து ஊருக்குள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பின் எல்லைப் பிரதேசத்திலுள்ள கிராமங்களில் யானைகள் அண்மைக்காலமாக நடத்திவரும் தாக்குதல்கள் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தும் உள்ளனர். அத்துடன் பல வீடுகள் சேதமடைந்துள்ளமையும் குறிப்படத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’