இ ளைஞர் யுவதிகளுக்கான பல்வேறு துறைசார் தொழிற் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் திறன் என்பன விருத்தியடையும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (21) யாழ் நுலகக் கேட்போர் கூடத்தில் சிறுவர் நிதியம் அனுசரனையின் கீழ் திறன் மற்றும் தொழிற்பயிற்சி கற்கை நெறிகளுக்கான தொழிற் பயிற்சிகளை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எமது பகுதியில் வாழும் மிகவும் கஸ்டப்பட்ட மக்களுக்கும் தொழில் இல்லாதவர்களுக்கும் இவ்வாறான பயிற்சிகளை வழங்கி சான்றிதழ் வழங்குதன் மூலம் பலர் வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ள உதவியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான பயிற்சிகளை பெற்றவர்களது வாழ்க்கைத்தரம் உயர்வடையும் எனவும் இந் நிறுவனத்தின் செயற்பாடுகள் சிறப்பானதாகவும் மக்களுக்கு பெரும் உதவியாகவும் இருக்கின்றதெனவும் தெரிவித்த அவர் இந் நிறுவனத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து பயிற்சியை முடித்தவர்களுக்கான சான்றிதழ்களை பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் சிறுவர் நிதியத்தின் பிராந்திய முகாமையாளர் ராஜன் தவசீலன் தீவக கல்வி பணிப்பாளர் திரு. வரதகுலசிங்கம் ராதாகிருஸ்ணன் மற்றும் பயிற்சியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’