வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 22 டிசம்பர், 2010

பல்வேறு எதிர்ப்பு பேரணிகளை நடத்த ஐ.தே.க.திட்டம்: ரணில் விக்கிரமசிங்க

க்கிய தேசிய கட்சியினால் எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டத்தைப் போன்று பல்வேறு எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அனுமதிச் சீட்டை வாங்கிக்கொண்டு கோட்டை புகையிரத நிலையத்தினுள் சென்ற ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐ.தே.க.வின் உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.
இதனையடுத்து அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், "இதற்கிடையில் மக்களை அணிதிரட்டவும் கூடிய ஆதரவைப் பெற்றுக்கொள்ளவும் கொழும்பிலும் சுற்றுப்புரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுமெனவும்" அவர் கூறினார்.
"சகல துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். வாழ்க்கைச் செலவானது தாங்கமுடியாதளவு சுமையாகவுள்ளது. சகலருக்கும் சம்பள உயர்வு கிடைக்கும்வரை போராடுவோம். அரசாங்கம் சம்பள உயர்வை தானாக தராத பட்சத்தில் அதனை நாம் வழங்க வைப்போம்" என்றார் ரணில்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, "அரசாங்கம் விரையங்களைக் குறைத்து பண்டிகை காலத்தில் மக்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’