வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 28 டிசம்பர், 2010

வடக்கு மாகாண சபை அலுவலகங்கள் அனைத்தும் எதிர்வரும் ஜனவரி முதல் வடக்கில் இயங்கும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

ட மாகாண சபையின் அனைத்து அலுவலகங்களும் எதிர்வரும் ஜனவரி 31ம் திகதிற்குள் கிளிநொச்சி யாழ்ப்பாணத்தில் திறந்து தங்களின் செயற்பாடுகளை மேற்க்கொள்ள இருக்கின்றன. அதில் மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் அடங்குவதால் இப் பிரதேசங்களின் கல்வி வளர்சியை முன்னெடுப்பதில் இலகுவானதாக இருக்கும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (27) காரைநகரில் கோட்டக் கல்வி அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இதுவரை காலமும் திருக்கோணமலையில் இயங்கி வந்த வடமாகாண சபைகளின் அலுவலகம் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களின் முயற்சியின் பயனாக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் தங்களுடைய அலுவலகங்களை திறந்து பணியாற்ற இருக்கிறது. எனவே இனிவரும் காலங்களில் வடமாகாணத்தின் பல்வேறு துறைகள் அபிவிருத்தி பணிகளில்; இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்த சந்திரகுமார் அவர்கள் காரைநகர் மக்களைப் பொறுத்தவரை இன்று ஒரு மகிழ்ச்சியான நாள் ஏனெனில் இதுவரை காலமும் ஊர்காவற்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்த மக்கள் இனிமேல் தங்களுக்கென்று தனியான அலுவலகம் மூலம் பயன்பெறவுள்ளனர். ஒரு காலத்தில் கல்வியில் முன்னேற்றகரமான நிலையில் இருந்த இப் பிரதேசங்கள் அன்மைய காலங்களாக மீண்டும் பழைய நிலைமைக்கு கல்வியை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்பது மட்டுமன்றி நேர்த்தியான கல்விசார் நிர்வாக கட்டமைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தேசிய ரீதியான அபிவிருத்திற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் காரைநகர் தியாகராஜா மகாவித்தியாலயமும் உள்ளடங்கி உள்ளதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார். மேலும் ஆளுநரிடம் சந்திரகுமார் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க அப் பாடசாலையின் அபிவிருத்திக்கு ஆளுநர் அவர்கள் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டுள்ளதாக ஆளுநர் அவர்களே இங்கு அறிவித்தார்.
நிகழ்வின் முன்னதாக விருந்தினர்கள் பான்ட் இசை அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டனர். பின்னர் கொடிகள் ஏற்றப்பட்டதோடு கோட்ட கல்வி அலுவலகத்தின் பெயர் பலகையினை ஆளுநர் அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தனர். அத்தோடு கோட்டக் கல்வி அலுவலகத்தை வடமாகாண ஆளுநர் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
இன்றைய நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் மாகாணக் கல்விப் பணிப்பாளர் விக்கினேஸ்வரன் மேலதிகப் பணிப்பாளர் செல்வரட்ணம் யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வேதநாயகன் ஊர்காவற்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஈ.பி.டி.பி.யின் வலிகாமம் பிரதேச இணைப்பாளர் ஜீவன் ஈ.பி.டி.பி.யின் காரைநகர் பிரதேச பொறுப்பாளர் ரஜனி பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’