பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த மாத ஆரம்பம் முதல் யோகாசனப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் பயிற்றுவிப்பாளராக சமின் வர்ணகுல என்கின்ற யோகா மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த யோகா பயிற்சியானது பாராளுமன்ற உறுப்பினர்களின் மனம் உடல் ஆன்மா ஆகியவற்றுக்கான வழிகாட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் தற்போது அமைதி நிலவுகின்றபோதிலும் அமைதி அற்றவர்களாகவும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளனவர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுவதாக கூறுகிறார் யோகா மாஸ்டர் வர்ணகுல.
மூச்சுப் பயிற்சிகள் மற்றும் அங்கப் பயிற்சிகள் ஆகியன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்கம் நன்னடத்தை சுய கட்டுப்பாடு ஆகியவற்றை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற அமர்வுகளின் ஆரம்பத்தில் யோகாப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. யோகாப் பயிற்சிக்காக அணிந்து வருகின்ற உடையுடனேயே பாராளுமன்ற அமர்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்ற முடியும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’