மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் அரச பணியாளர்கள் கடமையுணர்வுடனும் சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற வேண்டும் என யாழ் மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் யாழ் கிளைக்கான புதிய கட்டடத் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மிகவும் கஸ்டமான சூழ்நிலைகளில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனது சேவைகளை நல்ல முறையில் செய்து வந்துள்ளது.
ஆசியாவின் அதிசயம் மிக்க நாடாக இலங்கையை மாற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் எண்ணத்திற்கு நாம் ஒவ்வொருவரும் செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிறந்த தலைமைத்துவத்துடனும் வழிகாட்டலுடனும் மக்களது வாழ்வாதாரத் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் அரச பணியாளர்கள் கடமை உணர்வுடனும் சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற வேண்டும். அவ்வாறு பணியாற்றும் பட்சத்திலேயே எமது மக்கள் ஓர் உயர்வான நிலையை அடைய முடியும்.
இன்று ஒரு அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதனைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் அதுமட்டுமல்லாமல் இக்காலப் பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் ஒன்றுபட்டு உழைப்போம் என்றும் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதான வீதியூடாக மங்கள வார்த்தியம் சகிதம் நிகழ்விடத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
அங்கு தேசியக் கொடியினை அமைச்சர் அவர்களும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனக் கொடியினை அதன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான மொகான் டி அல்விஸ் ஏற்றிவைத்தார்.
புதிய கிளைக் காரியாலயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேதவானந்தா அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்ததைத் தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டன.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் யாழ் பிராந்திய பொதுமுகாமையாளர் திருமதி ராணி அரியநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சர்மதத் தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றது.
உரைகளை உதவிப்பொது முகாமையாளர் நிலங்க விக்கிரமசிங்க யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளரும் மொகான் டி அல்விஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறப்புரையாற்றும் போது யாழ்ப்பாணத்தில் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மீண்டும் தனது பழைய இடத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ள இன்றைய நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக உள்ளது.
இந்தத் தாபனம் கடந்த காலங்களில் தனது பல்வேறு பணிகளைச் செய்துள்ள காரணத்தினால்தான் மக்கள் தோடர்ந்தும் இந்த தாபனம் மீது நம்பிக்கை வைத்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றுள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எல்லோரும் ஒருமித்து பேசினால் இனப்பிரச்சினைக்கு நிச்சயம் அரசியல்தீர்வு காணக் கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியதையும் அமைச்சர் அப்போது நினைவு கூர்ந்தார்.
எனவே எமது மக்களுக்கான அரசியல் தீர்வுக்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் யாழ் மாவட்டத்திற்கான தனது சேவையினை கடந்த 49 ஆண்டுகளாக ஆற்றி வருகின்றது.
நாடெங்கிலும் 130 கிளைகளுடன் இயங்கி வரும் இத்தாபனம் கடந்த கால யுத்த சூழ்நிலையால் 1995ம் ஆண்டு முதல் 2010 வரையான காலப்பகுதியில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் ஒரு பகுதியில் இங்கி வந்த நிலையில் இதன் பழைய இடமான இல 571 ஆஸ்பத்திரி வீதியில் மீண்டும் தனது சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இறுதியில் பொதுக் காப்புறுதி நடவடிக்கை ஆகியவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளிட்டோர் தொடக்கி வைத்ததுடன் வன்னியில் போரின் போது சேதமான வாகனங்களுக்கான இழப்பீட்டுக் காசேலைகளும் வழங்கப்பட்டன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’