இந்திய பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார், இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரின் விஜயத்தின்போது நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கைக்கு சில ஆயுதங்களையும் இந்தியா அன்பளிப்பாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
தோளில் வைத்து ஏவப்படும் ஏவுகணைகள் போன்றவையும் இவற்றில் அடங்கும். இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு சீனா முயற்சித்து வரும் பின்னணியில் இலங்கையின் பாதுகாப்பு ஆற்றலை கட்டியெழுப்பதற்கு உதவும் இந்தியாவின் முயற்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆயுதங்கள் வழங்கப்படுவதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரு ராடர்கள் மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகள் ஆகியவற்றையும் தற்காலிக அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யுத்த காலத்தில் இலங்கைக் கடற்படைக்கு கரையோர காவல் படகொன்றையும் இந்தியா வழங்கியது. எனினும் அதுவும் அன்பளிப்பாகுமா என்பது தெரியவில்லை.
மேற்படி கருவிகளை இயக்குவதற்கு இந்திய விமானப்படை உத்தியோகஸ்தரகளும் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் அவர்கள் இலங்கை பாதுகாப்புப் படையினர் தமது முகாம்களை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவவே ஈடுபடுத்தப்பட்டனரேதவிர வலிந்த தாக்குதல்களில் பங்குபற்றவில்லை என அவ்வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பிரதீப் குமார் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கான எதிர்கால தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’