இலங்கையிலிருந்து அகதிகளாகச் சென்று இந்திய முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக அவர்களை நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆட்கடத்தல்காரர்கள் சிலருக்கு இந்திய கியூ புலனாய்வுப் பிரிவு வலைவீசியுள்ளது.
Read: In English
சட்டவிரோதமாக படகுகள் மூலம் குறித்த மக்களை அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்துவதாக மேற்படி ஆட்கடத்தல்காரர்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அப்பிரிவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வேறு நாடுகளின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதாக குறித்த முகாம்களில் வாழும் இலங்கையர்களை நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆட்கடத்தல்காரர்கள் 50 பேர் கடந்த 5 வருட காலங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவ்வதிகாரி கூறினார்.
அத்துடன், இலங்கைத் தமிழர்களை அவர்களது தாய் நாட்டுக்கு அல்லது வேறு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி அம்மக்களிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் ஆட்கடத்தல் முகவர்கள் நால்வரை கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரத்தில் வைத்து கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’