அசினுக்கும் சல்மான்கானுக்கும் ரகசியத் திருமணம் நடந்ததாக படத்துடன் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கஜினி படம் மூலம் இந்திக்கு போனார். தற்போது சல்மான் கான் ஜோடியாக ரெடி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே லண்டன் டிரீம்ஸ் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர்.
சல்மான்கானுக்கும் அசினுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. அசினுக்கு மும்பையில் சல்மான்கான் வீடு வாங்கி கொடுத்ததாகவும் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் நேற்று இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக மும்பை, கேரள பத்திரிகைகள் பரபரப்பு செய்தி வெளியிட்டன. பஞ்சாபி முறைப்படியும், அசின் பெற்றோருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற படமும் வெளியிடப்பட்டது.
ஆனால் விசாரித்ததில் இந்தப் புகைப்படம் ரெடி படத்துக்காக எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இது பற்றி அசினிடம் கேட்ட போது, "எனக்கும் சல்மான்கானுக்கும் திருமணம் நடந்து விட்டதாக வெளியான செய்தியைhd பார்த்து சிரிப்புதான் வந்தது. கேரளாவிலிருந்து நிறைய பேர் எனக்கு போன் செய்தார்கள். அம்மா, அப்பாவுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாயே இது நியாயமா? என்று கேட்டனர். மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
ரெடி படத்தில் சல்மான்கானும் நானும் நடித்து வருகிறோம். அந்த படத்தில் எங்களுக்கு திருமணம் நடப்பது போன்ற ஒரு காட்சி வருகிறது. அதனை யாரோ போட்டோ எடுத்து நிஜமாகவே திருமணம் நடந்ததாக வெளியே பரப்பி விட்டுள்ளனர்...", என்றார்
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’