கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் புத்தளம் மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதி செயலாளர் வருண டி சேரம் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி புத்தளத்திலும் 8ஆம் 9ஆம் திகதிகளில் மன்னாரிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட அமர்வுகள் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இந்த ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட அமர்வுகள் ஏற்கனவே டிசெம்பர் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அம்பாறை மாவட்ட அமர்வுகள் ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளை மொனராகலை அநுராதபுரம் மற்றும் பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையம் மற்றும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள காலி, பூஸா தடுப்பு முகாம் ஆகியவற்றிற்கு நல்லிணக்க ஆணைக்குழு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’