இலங்கை இராணுவத்துக்கு கவச வாகனங்கள் கொள்வனவு செய்வது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறுவதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் கவசப் படை பிரிவின் 55 ஆவது ஆண்டு விழாவின் பூர்த்தியை முன்னிட்டு இராணுவத்தளபதி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் தற்போது பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு சமாதானம் நிலவுகின்றது. இவ்வாறான ஒரு சூழலில் மீண்டும் ஒரு பயங்கரவாதம் உருவாக இடம்கொடுக்க மாட்டோம். மேலும் இலங்கை இராணுவத்துக்கு கவச வாகனங்கள் கொள்வனவு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. என தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’