அண்மையில் பிரிட்டன் சென்றிருந்தபோடு எலிசபெத் ராணியுடன் போப்பாண்டவர் |
அண்மையில்தான் போப்பாண்டவர் பிரிட்டனுக்கான ஒரு விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிபிசி வானொலியில் போப்பாண்டவரின் விசேட செய்தி வெளியானது பிரிட்டனில் சர்ச்சைகளையும் தோற்றுவித்துள்ளது.
நத்தார் செய்தி
பிபிசியின் ரேடியோ 4 என்ற உள்நாட்டு வானொலி சானலில் டுடே என்ற பிரபல நிகழ்ச்சியில் தாட் பார் த டே என்ற பகுதிக்காக போப்பாண்டவர் இந்த நத்தார் செய்தியை வழங்கியுள்ளார்.
தான் அண்மையில் சென்று வந்த ஒரு நாட்டின் மக்களுக்காகவென போப்பாண்டவர் விசேட செய்தி வழங்குவது என்பது இதுவே முதல் முறை.
இந்தச் செய்தியில் தனது அண்மைய விஜயத்தைப் பற்றி அவர் பாசத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த செப்டம்பரில் நான் நான்கு நாள் பயணமாக ஐக்கிய ராஜ்ஜியம் சென்றுவந்ததை மிகவும் பிரியத்துடனும் நினைவுகூர்கிறேன். உங்களுக்கு எல்லாம் மறுபடியும் வாழ்த்து சொல்ல சந்தர்ப்பம் கிடைத்திருப்பதையிட்டு சந்தோஷம் அடைகிறேன். |
"தனக்கும் பிரிட்டிஷ் மக்களுக்கும் இடையில் நல்லதொரு நட்பு ஆரம்பித்து வளர்ந்து வருவதாக போப்பாண்டவர் உணர்கிறார். இந்த நட்புறவை உயிர்த்துடிப்போடு வைத்திருப்பதற்கான ஒரு மிக நல்ல சந்தர்ப்பம்தான் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி இந்த விசேட செய்தியை போப்பாண்டவர் வழங்கியதென்பது" என பிரிட்டிஷ் மக்களுக்கு விசேடமாக செய்தி வழங்க போப்பாண்டவர் பெனெடிக்ட் முடிவுசெய்ததன் காரணத்தை வத்திகான் வானொலியின் தலைவர் அருட்தந்தை பெடெரிகோ லொம்பார்டி விளக்கினார்.
பிபிசி நிறுவனம் மாதக்கணக்கில் வத்திகானோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி போப்பாண்டவரின் இந்த விசேட செய்தியைப் பெற்றுள்ளது.
சர்ச்சை
ஆனால் செய்தி வழங்க போப்பாண்டவரை தேர்ந்தெடுத்தது என்பது பிபிசி நிறுவனம் செய்த தவறு என்று பிரிட்டனின் தேசிய மதச்சார்பின்மை சங்கத்தின் இயக்குநரான கீத் போர்டியஸ் விமர்சித்துள்ளார்.
கத்தோலிக்கத் திருச்சபையினரால் சிறார்களாய் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளான லட்சக்கணக்கானோரின் முகத்தில் அறைந்ததுபோன்ற செயல் இது |
கத்தோலிக்கத் திருச்சபை பாதிரிமார்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறார்கள் தொடர்பில் ஏராளமான கேள்விகளுக்கு போப்பாண்டவர் பதில் அளிக்க வேண்டியுள்ள நிலையில், அவரின் செய்தியை மட்டும் வெளியிடுவது என்பது சரியல்ல என்று அவர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’