வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 22 டிசம்பர், 2010

அமெரிக்க விடுதி உணவுகளில் விஷம் கலக்க அல்-கொய்தா திட்டம்

மெரிக்க விடுதிகளில் தயாரிக்கப்படும் உணவுகளில் விஷம் கலந்து தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வுத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

உணவுகளில் சயனைட் அல்லது ரைசின் எனப்படும் ஆமணக்கு விதையில் இருந்து பெறப்படும் விஷத்தினை உணவில் கலந்து வார இறுதி நாளொன்றில் அழிவுகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத்தொடர்ந்து நாடுதழுவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பு தொடர்பில் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டமானது தீவிரவாதிகள் குண்டுத்தாக்குதல்களுக்கு அப்பால் சென்றுள்ளமையைக் காட்டுவதாகவும் இது அரேபியாவில் உள்ள அல்-கொய்தா அமைப்பினுடைய திட்டம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதே அமைப்பு கடந்த அக்டோபர் மாதம் விமானங்களில் குண்டுப் பொதிகளை அனுப்பி அமெரிக்காவில் தாக்குதல்களை மேற்கொள்ள முயற்சி செய்ததாகக் கருதப்படுகின்றது.
அரேபியாவில் இயங்கும் அல்-கொய்தா அமைப்பின் குண்டுத்தாக்குதல் முயற்சியை அதன் தலைமை பாராட்டியது. மேலும் பொருளாதாரத்தில் பின்னவை எதிர்நோக்கியுள்ள எதிரிகளை குறைந்த அளவில் தொடர்ச்சியான தாக்குதல் மூலம் பின்னடைவை ஏற்படுத்த வழிவகுக்கவேண்டுமெனவும் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தது.
உணவில் விஷத்தினை கலந்து தாக்குதல் நடத்தப்படுமாயின் அது பேரழிவிற்கு வழிவகுக்குமென அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’