இன்று காலை யாழ் நாவலர் வீதி மற்றும் ராசாவின் தோட்டம் பகுதிகளுக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதிகளின் சுற்றுச் சூழல் தொடர்பில் ஆராய்ந்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்று மாலை கொழும்பில் இருந்து யாழ் வந்த அமைச்சர் அவர்கள் யாழ் மாவட்டத்தில் குப்பைகளை வீதியோரங்களில் கொட்டுவதால் ஏற்படுகின்ற சூழல் மாசுறுதல் தொடர்பில் கண்காணித்திருந்தார்.
இதனடிப்படையில் இன்று அப்பகுதிகளுக்குச் சென்ற அமைச்சர் அவர்கள் வீதியோரங்களில் குப்பை கூழங்கள் அகற்றப்படாமை தொடர்பில் நேரில் கண்டறிந்து அவை தொடர்பில் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
இதன் பின்னர் யாழ் மாநகர சபை முதல்வருடன் உடனடியாகத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்படி குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பணிப்புரை வழங்கியதுடன் யாழ் மாநகர சபை எல்லைக்குள் வீதி ஓரங்களிலும் பொது இடங்களிலும் குப்பைகளை கொட்டி வைக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படியும் பணித்தார்.
அத்துடன் குப்பை கூழங்களை அகற்றும் பணிகளில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் கால் கவசம் மற்றும் கையுறைகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இவ்வாறு குப்பைகளைக் கொட்டி சூழலை மாசுபடுத்துவோர் தொடர்பில் சட்ட ரீதியில் கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’