வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 டிசம்பர், 2010

நியூசிலாந்தில் கிடைத்த தமிழ் நாயகி

மிழ் சினிமாவுக்கு நன்றாகத் தமிழ் தெரிந்த ஒருவர் நாயகியாக கிடைத்துள்ளார். அவர் உத்தரா. அரிது அரிது படத்தின் நாயகிதான் இந்த உத்தரா.

ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் மதிவாணன். முதல்வன் படத்திலிருந்து சிவாஜி வரை உதவியாளராக பணியாற்றியவர். இப்போது இவர் தனிக்குடித்தனம் போயுள்ளார், அதாவது தனி இயக்குநராக உருவெடுத்துள்ளார்.
இவர் இயக்கும் முதல் படம்தான் அரிது அரிது. ஹரீஷ் கல்யாண், உத்தரா ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் தனித் தனிக் கதை உண்டு.
ஹரீஷ் கல்யாணை நிறையப் பேருக்குத் தெரியும், ஆனால் தெரியாது. அதாவது சிந்துசமவெளிப் படம் தெரியும்தானே, அதில் நாயகனாக நடித்தவர்தான் இந்த ஹரீஷ் கல்யாண். அப்படத்தின் நாயகியான அமலா பாலும், படத்தின் காமக் கதையும் பிரபலமானு போல ஹரீஷ் பிரபலமாகாமல் போய் விட்டார். ஆனால் அரிது அரிது படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறாராம் ஹரீஷ்.
அடுத்து உத்தரா. இவர் நியூசிலாந்தைச் சேர்ந்த தமிழச்சியாம். எதேச்சையாகத்தான் இவரை கண்டுபிடித்திருக்கிறார்கள். தமிழ் நன்றாகப் பேசுகிறார். இவர் நியூசிலாந்தில் நடைபெற்ற இந்தியப் பெண்களுக்கான மிஸ் இந்தியாப் போட்டியில் பட்டம் வென்றவராம்.
தமிழும், தமிழ் கலாச்சாரமும் அறிந்தவரான உத்தரா, இப்படத்தில் அசத்தலான நடிப்பைக் கொடுத்துள்ளாராம். நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங்கில் ஈடுபட்டிருந்தவர் என்பதால் கேமரா பயம் சிறிதும் கிடையாதாம்.
படத்தின் கதையும், காட்சியமைப்பும், கேமரா பணியும் அனைவரையும் கவரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மதிவாணன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’