இங்கிலாந்தில் பல்கலைக்கழக படிப்பிற்கு மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணத்தை உயர்த்துவதாக எடுத்த முடிவுக்கு எதிராக வியாழனன்று லண்டனில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடிதத்தது.
அப்போது ஓர் இடத்தில் பட்டத்துக்குரிய பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸும் அவரது மனைவி கமீலா பார்க்கரும் சென்ற கார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இளவரசரும் இளவரசியும் இத்தாக்குதலில் காயமின்றி தப்பித்துவிட்டனர்.
லண்டனில் நடந்த பெரும் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் பணியில் கிட்டத்தட்ட மூவாயிரம் பொலிசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இருந்தும் அரச கட்டிடங்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஐம்பது பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இது தவிர ஆர்ப்பாட்டத்தின்போது ராஜ குடும்பத்தினர் சென்ற வாகனம் தாக்குதலுக்குள்ளான நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்த பொலிசார் கையாண்ட உத்திகள் போதுமானதா? அவர்கள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்களா? என்றெல்லாம வாதங்கள் எழுந்துள்ளன.
லண்டன் வீதிகளில் நடந்த இந்த வன்முறையை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் வன்மையாகக் கண்டித்தார்.
![]() | ![]() ![]() |
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டம் முழு வலிமையுடன் பாய்வதை தாங்கள் உறுதிசெய்வோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
கல்லூரிக் கட்டணங்களை வருடத்துக்கு மூவாயிரம் பவுண்டுகளிலிருந்து ஒன்பதாயிரம் பவுண்டுகள் வரை உயர்த்துவது என்ற அரசாங்கத்தின் திட்டம் சிறியதோர் வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் வியாழனன்று நிறைவேறியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’