
குடாநாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படையினரின் வீதிச்சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.
குறிப்பாக நவாலி , ]சங்கானை, சித்தன்கேணி , தொடிலடி, மாசியப்பிட்டி, அளவெட்டி போன்ற பகுதிகளில் இவ்வாறான சோதனைகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்குறிப்பிட்ட இடங்களில் இராணுவத்தினரால் வீதிகளில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் சிறிய ரக வாகனங்கள் வழி மறிக்கப்பட்டு வாகன சாரதியின் அடையாள அட்டை இலக்கம், வாகனத்தின் இலக்கம் என்பன பதிவு செய்யப்படுகின்றன.
இந்தப் பதிவு நடவடிக்கைகள் இராணுவ உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு அமைவாகவே தாம் மேற்கொள்வதாக வீதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவச் சிப்பாய் ஒருவர் தெரிவிக்கின்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’