தன்னை ஆண் என கூறி மணமகள் வீட்டாரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட 32 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று மாத்தறை, கந்தராவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் மாத்தறை நீதிவான் நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது நீதிவான் உத்தரவுக்கிணங்க சந்தேகநபர் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே அவர் பெண்ணென உறுதியாகியுள்ளது.
திக்வெல்லை, அலுத்கொட, மாகலஹேன பகுதியைச் சேர்ந்த நிரோஷா பிரசங்கனி என்ற பெண்ணே மற்றுமொரு பெண்ணிடம் தான் ஆண் என பொய் வேடம் போட்டு திருமணம் செய்துகொண்டுள்ளார்.
திருமணத்துக்குப் பின் உண்மை வெளியானதை அடுத்து பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவரை 5 ஆயிரம் ரூபா சரீர பிணையில் செல்ல மாத்தறை பிரதான நீதிவான் உதேஷ் ரணதுங்க உத்தரவிட்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’