வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 7 டிசம்பர், 2010

ரிஸானாவுக்கான மரண தண்டனை அமுல்படுத்தல் சவூதி மன்னரால் இடைநிறுத்தம்

வூதி அரேபியாவில் குழந்தையொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணாண ரிஸானா நபீக்கிற்கு, மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதை சவூதி அரேபிய மன்னர் இடைநிறுத்தி வைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு, நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளையடுத்து மேற்படி தண்டனை அமுல்படுத்தப்படுவதை சவூதி அரேபிய மன்னர் இடைநிறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் டிலான் பெரோ கூறினார்.
எனினும் 'இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தின்படி றிஸானா நபீக்கிற்கு சவூதி அரேபிய மன்னராலும் முழுமையான மன்னிப்பளிக்க முடியாது. சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்களே அவருக்கு மன்னிப்பளிக்க முடியும்' எனவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’