வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 7 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் கைது

விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ் லண்டன் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சுவீடனில் அசேஞ்சுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு எதிராக பிடிவிறாந்து பிறக்கப்பட்டிருந்தது.

தன்மீதான வலை பொலிஸாரின் வலை இறுகிய நிலையில் இன்று செவ்வாய்கிழமை லண்டன் பொலிஸாரிடம் சரணடையப்போவதாக ஜூலியன் அசேஞ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் லண்டன் நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு நேர அவகாசம் பெற்று லண்டன் பொலிஸ் நிலையமொன்றுக்கு சென்ற அசேஞ் அங்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு தொடர்பான சந்தேகத்தின் பேரில் சுவீடன் பொலிஸாரின் சார்பாக ஜூலியன் அசேஞ் கைது செய்யப்பட்டுள்ளார் என லண்டன் பொலிஸார் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
ஜூலியன் அசேஞ் ஸ்தாபித்த விக்கிலீக்ஸ் இணையத்தளம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பெரும் எண்ணிக்கையான இரகசிய ஆவணங்களை வெளியிட்டதால் அவர் அமெரிக்காவின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’