வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 டிசம்பர், 2010

தேசிய கீதம் தொடர்பில் மொழிப்பிரச்சினையை தோற்றுவிப்பது இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும் : சீலரத்ன தேரர்

தேசிய கீதம் தமிழில் இசைப்பதைத் தடை செய்யும் முயற்சியானது புலிசார்பான சர்வதேச சதிகாரர்களுக்கு எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கான சந்தர்ப்பத்திற்கு மேலுமொரு காரணியாக அமையுமென ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்தார்
.யுத்தத்தை வெற்றிகரமாக முடித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிழையான ஆலோசகர்களின் பிடியில் சிக்கமாட்டாரெனவும் சீலரத்ன தேரர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக பத்தரமுல்லே சீலரத்ன தேரர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத்தை ஒழித்து யுத்தத்தை முடித்து ஜனாதிபதி நாட்டை இன்று ஒன்றுபடுத்தியுள்ளார். எனவே, தற்போதைய அவசரத் தேவை சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது, நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்திசெய்வதாகும். இவற்றுக்கு முதலிடம் வழங்கியுள்ள ஜனாதிபதி அதற்காக வரவு செலவுத் திட்டத்தையும் முன்வைத்துள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தமிழில் தேசிய மீதம் இசைப்பது தடைசெய்யப்பட்டு சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்பட வேண்டுமென்ற என்ற விவாதம் தோன்றியுள்ளது.
ஒரு நாட்டின் தேசிய கீதம் அந்நாட்டின் பெரும்பான்மை மொழியில் இருக்கவேண்டும். உலகில் இவ்வாறான நடவடிக்கைகளே பின்பற்றப்படுகின்றன. இதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், யுத்தம் முடிந்த நிலையில் முக்கியத்துவம் வழங்குவதற்கு எத்தனையோ பிரச்சினைகள் நம் முன்னிருக்கையில் தேசிய கீதம் தொடர்பில் மொழிப் பிரச்சினையை தற்போது தோற்றுவிப்பது இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும்.
அத்தோடு, சர்வதேச ரீதியில் எமக்கு எதிரான நாடுகளுக்கு மெல்லுவதற்கு வாய்க்கு அவல் கிடைத்தது போல் அமையும். தேசிய கீதத்தையே தமிழில் தடைவிதிக்கும் இலங்கை அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கப்போகின்றதென புலி சார்பானவர்களின் பிரசாரத்திற்கு உந்துசக்தியாக அமைந்துவிடும்.
எனவே, யுத்தத்தில் வெற்றிகண்ட ஜனாதிபதி அனைத்தையும் அறிவார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என்றும் சீலரத்ன தேரர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’