வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 16 டிசம்பர், 2010

அழிவுகளை நோக்கி உங்களை வழிநடத்துபவர்களை நிராகரியுங்கள் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

க்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு ஜதார்த்தத்திற்கு புறம்பாக பேசியும் அதன்படி மக்களை வழிநடத்தி அவர்களை அழிவுக்கு இட்டுச்செல்பவர்கள் தொடர்பில் மக்கள் தெளிவாக இருக்கவேண்டியதோடு நிராகரிக்கவும் வேண்டும் சில அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக மக்களின் உணர்வுகளை தூண்டியும் பத்திரிகை தலைப்புச்செய்திகளில் இடம்பிடிக்கும் வகையிலும் கைதட்டல்களுக்காகவும் பேசி மக்களை அழிவின் பாதையில் இட்டுச்செல்கிறார்கள் . (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (16) பரந்தன் உமையாள்புரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எப்போதும் நடைமுறைக்குச் சாத்தியமான வகையில் சிந்திப்பதோடு மக்களையும் அவற்றை நோக்கியே வழிநடத்தவேண்டும் அவ்வாறானவர்களுடனேயே மக்களும் இருக்க வேண்டும் இல்லையெனில் பாதிக்கப்படப்போவது மக்கள்தான் சில அரசியல்வாதிகள் போன்று மக்களும் உணர்ச்சிவசப்பட்டுவிடக்கூடாது நிதானமாக இருக்கவேண்டும் மீண்டுமொரு அழிவை மக்கள் சந்தித்துவிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து மக்களின் தேவைகளை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் வீதி மின்சாரம் போக்குவரத்து சுகாதாரம் தொடர்பில் தான் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வைப்பெற்றுதருவதாகவும் குறிப்பாக உள் வீதீகள் புனரமைப்பது தொடர்பில் பிரதேசசபையுடன் பேசி விரைவில் ஏற்பாடு செய்வதாகவும் கூறிய அவர் வேலைவாய்ப்பு தொடர்பில் பதிலளித்தபோது விரைவில் ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் அதன் பின் இப்பிரதேசத்தின் வேலையில்லாப்பிரச்சினை பெருமளவுக்கு தீர்க்கப்படும் எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து டி.ஆர்.சி நிறுவனத்;தால் வழங்கப்பட்ட வெள்ள நிவாரணம் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதனை சந்திரகுமார் அவர்களுடன் கிராம அலுவலர் கரைச்சி வடக்கு மீனவ சங்கங்களின் சமாச பொதுமுகாமையாளர் கணேசபிள்ளை ஆகியோர் வழங்கிவைத்தனர்.
இந்நிகழ்வில் கிராம அலுவலர் சேகர் உமையாள்புரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் செயலாளர் கமக்கார அமைப்பு மற்றும் மாதர்சங்கப் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’