வகுப்பேற்றப்படவில்லை என்ற காரணத்தினால் 12 வயது சிறுவன் கழுத்தில் சுறுக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று நுவரெலியா மாவட்டம் ஹட்டன் நோர்வூட் நிவ்வெளி தோட்டத்தில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வூட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்விக்கற்று வந்த லோகேஸ்வரன் விதுர்ஸன் என்ற மாணவன் தரம் ஏழுக்கு வகுப்பேற்றப்படவில்லை என்பதை மாணவர் தேர்ச்சி அறிக்கை மூலம் அறிந்து கொண்டதன் பின்பு வீட்டுக்குச்சென்ற அந்தச் சிறுவன் வீட்டினுள் கூரைப்பகுதியிலுள்ள கம்பொன்றில் கயிறை இணைத்து கழுத்தில் சுறுக்கிட்டுக்கொண்டதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இதனைக்கண்ணுற்ற அந்தச்சிறுவனின் தம்பி அயலவருக்கு அறிவித்துள்ளார்.
இந்தச்சிறுவனின் தந்தை கொழும்பில் தொழில் புரிகின்ற அதேவேளை இந்தச்சிறுவனின் தாய் தோட்டத்தில் வேலை செய்கின்றார். சிறுவனின் சடலம் தற்போது டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’